வீட்டிற்குள் புகுந்து தங்கச்சங்கிலி திருடிய பெண் கைது


வீட்டிற்குள் புகுந்து தங்கச்சங்கிலி திருடிய பெண் கைது
x

வீட்டிற்குள் புகுந்து தங்கச்சங்கிலி திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் வெங்கமேடு சிவானந்தா தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஜோதிமணி (வயது 55). சம்பவத்தன்று குருசாமி வேலைக்கு சென்று விட்டார். ஜோதிமணி வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தார். அப்போது வீட்டிற்குள் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. இதுகுறித்து ஜோதிமணி வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜோதிமணி கடைக்கு சென்றதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த நந்தினி (22) என்பவர் வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் தங்கச்சங்கிலியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நந்தினியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story