வீடுபுகுந்து நகை திருடிய பெண் கைது


வீடுபுகுந்து நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீடுபுகுந்து நகை திருடிய பெண் கைது

ராமநாதபுரம்


ராமநாதபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் ரவிமுருகன். இவர் மாதந்தோறும் குலுக்கல் சீட்டு பிடித்து வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் மனைவி மகாலட்சுமி(வயது 33) என்பவர் சீட்டு போட்டுள்ளார். இந்நிலையில் இந்த மாதம் மகாலட்சுமிக்கு சீட்டு விழுந்துள்ளது. இந்த பணத்தினை பெறுவதற்காக ரவிமுருகன் வீட்டிற்கு மகாலட்சுமி வந்துள்ளார். அப்போது வீடு திறந்திருந்த நிலையில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருப்பது தெரிந்தது. அப்போது மகாலட்சுமி வீட்டில் பீரோவில் இருந்த நகைகளை பார்த்துள்ளார். அனைத்து நகைகளையும் எடுத்தால் தெரிந்துவிடும் என்பதால் அதில் இருந்து 10 பவுன் மதிப்பிலான கவர்னர் மாலை, நெக்லஸ் ஆகியவற்றை மற்றும் எடுத்துள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சி மாசானி அம்மன்கோவிலுக்கு சென்று திரும்பிய ரவிமுருகனின் மனைவி செல்வராணி வீட்டில் இருந்த நகைகளில் 10 பவுன் நகைகள் மட்டும் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டுக்கு மகாலட்சுமி மட்டும்தான் வந்து சென்றது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.3 லட்சம் பெற்று கடனை அடைத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை. போலீசார் வழக்குபதிவு செய்து மகாலட்சுமியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story