பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது


பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் பனையபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் செஞ்சி அருகே உள்ள மலையரசன் குப்பத்தை சேர்ந்த சீனுவாசன் மனைவி தமிழரசி(வயது 60) என்பவரது பையை சோதனை செய்தபோது, அவரது பையில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழரசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடு்த்து தமிழரசியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 148 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story