ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 20 பவுன் நகைகள்- ரூ.1¾ லட்சத்தை திருடிய பெண் கைது
கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ.1¾ லட்சத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
நகை-பணம் திருட்டு
கரூர் அருகே உள்ள வாங்கபாளையம் எம்.கே.நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 65) ரியல் எஸ்டேட் மற்றும் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவிலுக்கு சென்றார்.பின்னர் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 20¼ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பெண் கைது
இதுகுறித்து முருகானந்தம் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், முருகானந்தத்தின் நிதிநிறுவனத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வந்த வெங்கமேட்டை சேர்ந்த வான்மதி (24) என்பவர் முருகானந்தத்தின் வீட்டின் சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வான்மதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.