மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது


மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது
x

நாகர்கோவிலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நகைபறிப்பு சம்பவங்களில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நகைபறிப்பு சம்பவங்களில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

நகை பறிப்பு

அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 68). இவர் நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு அரசு பஸ்சில் புறப்பட்டார். அந்த பஸ் அண்ணா பஸ் நிலையத்தில் வந்து நின்றதும் ராஜம்மாள் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். அப்போது அவரது பின்னால் இருந்த ஒரு பெண் ராஜம்மாளின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார். இதைப் பார்த்த பொதுமக்கள் உடனே அந்த பெண்ணை பிடித்து கோட்டார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது

அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னசேலத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் (28) என்பது தெரியவந்தது. இவர் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் நகை பறிப்பு சம்பவத்தில் வேறு சில பெண்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் மா்ம பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story