ஓடும் பஸ்சில் பணம் திருடிய பெண் கைது
ஓடும் பஸ்சில் பணத்தை திருடிய பெண்ணை ைகது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 48). இவர் விளாத்திகுளம் சென்று விட்டு பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்ேபாது அவர் பையில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 500 வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பந்தல்குடி அருகே பஸ் வந்த போது அருகில் இருந்த பெண், சங்கரலிங்கம் அருகே காசுகள் கிடப்பதாக கூறி அதனை எடுக்க கூறியுள்ளார். பின்னர் அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்சில் ஏறி வீட்டுக்கு சென்றார். வீட்டிற்கு சென்ற போது பணப்பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சங்கரலிங்கம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஒரு பெண் தான் அந்த பணத்ைத திருடியது தெரியவந்தது. இந்தநிலையில் சங்கரலிங்கம் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி செல்வதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது வத்தலக்குண்டு அருகே பணத்தை திருடிய பெண், சங்கரலிங்கம் சென்ற பஸ்சில் ஏற முயன்றார். உடனே அவர் அந்த பெண்ணை பிடித்து தேவதானம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த பெண்ணை அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காஞ்சீபுரத்தை சேர்ந்த தேவி (30) என்பதும், சங்கரலிங்கத்திடம் பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்தனர்.