நர்சு கொலை வழக்கில் பெண் கைது


நர்சு கொலை வழக்கில் பெண் கைது
x

நர்சு கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சியை அடு்த்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 70). இவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார். பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற தனது மனைவியை பார்க்க ரஜினி வெளியூர் சென்று இருந்தார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ராதாவை கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டிவிட்டு மர்ம நபர் சென்றுவிட்டார்.

இது பற்றி தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த ரஜினி, தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து பார்த்த போது, ராதா அணிந்திருந்த 5 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது ெதரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ராதாவுக்கு சொந்த ஊர் லால்குடியை அடுத்த ஆலம்பாக்கம் என்பதும், அந்த ஊரை சேர்ந்த திருமேனி என்பவரின் மனைவி காந்தி முத்தரசநல்லூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்ததும், அப்போது ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், காந்தியை பிடித்து நடத்திய விசாரணையில், நகைக்காக ராதாவை அவர் கொலை செய்தது அம்பலமானது. இதைத்தொடர்ந்து போலீசார் காந்தியை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். பின்னர், அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story