மூவருக்கும் இடையே கடும் போட்டி: 2 வது கள்ளக்காதலுடன் சேர்ந்து முதல் கள்ளக்காதலனை எரித்து கொன்ற பெண் - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்


மூவருக்கும் இடையே கடும் போட்டி: 2 வது கள்ளக்காதலுடன் சேர்ந்து முதல் கள்ளக்காதலனை எரித்து கொன்ற  பெண் - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்
x

பொறி வியாபாரத்தில் வருமானம் வராததால், ஆறுமுகமும், வைத்தியும் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்... இவரது மனைவி கவிதா... இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், 2 ஆண் பிள்ளைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் இருந்து பிரிந்து கவிதா விருதாச்சலம் வந்துள்ளார். அங்கே என்ன செய்வது என தெரியாமல் இருந்த கவிதா, பாலக்கரையில் பொறிக்கடை வைத்திருந்த ஆறுமுகம் என்பவரிடம் வேலை கேட்டுள்ளார். ஆறுமுகம் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், கவிதாவிற்கு வேலை கொடுத்து, தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க அடைக்கலம் கொடுத்துள்ளார்.

நாளைடைவில் கவிதாவும் ஆறுமுகமும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். ஆறுமுகம் திருவிழாக்களில் பொறிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தபோது, உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தி என்பவர் அறிமுகமாகி ஆகியுள்ளார். பொறி வியாபாரத்தில் வருமானம் வராததால், ஆறுமுகமும், வைத்தியும் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டனர்.அதனைத் தொடர்ந்து, சிறு சிறு குற்றங்களில் இருவரும் ஈடுபட்டு, கிடைத்த பணத்தை வைத்து பங்கு பிரித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கவிதாவும், வைத்தியும் நெருங்கப் பழக ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரம் ஆறுமுகத்திற்கு தெரிய வரவே, வைத்திக்கும் ஆறுமுகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆறுமுகத்திடம் இருந்து பிரிந்து சென்ற கவிதா, உளுந்தூர்பேட்டை அடுத்த பு. கிள்ளனூர் கிராமத்தில் உள்ள வைத்தி வீட்டிற்கு வந்து அங்கேயே தங்கி உள்ளார். இதனை அறிந்த ஆறுமுகம், வைத்தி வீட்டிற்கு வந்து கவிதாவை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கவிதா மற்றும் வைத்தி இருவரும், ஆறுமுகத்தை அடித்து கீழே தள்ளி, வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஆறுமுகத்தின் மேல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம், ஒன்றும் தெரியாதது போல் ஆறுமுகமே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர்.பின்னர் படுகாயமடைந்த ஆறுமுகத்தை, கவிதாவும், வைத்தியும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை நடத்திய நிலையில், கொலை வழக்காக பதிவு செய்து, வைத்தி மற்றும் கவிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story