உடலில் தீவைத்து கொண்ட பெண் கருகி சாவு


உடலில் தீவைத்து கொண்ட பெண் கருகி சாவு
x

ராமநாதபுரம் அருகே குடிகார கணவரை திருத்த உடலில் தீவைத்து கொண்ட பெண் கருகி பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). இவர் முறுக்கு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலெட்சுமி (33). ராஜேந்திரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவதால் அவரை திருத்த வேண்டும் என்று விஜயலெட்சுமி இவ்வாறு குடித்துவிட்டு வந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வந்துள்ளார். ஆனால், அதனை கேட்காமல் ராஜேந்திரன் குடித்துவிட்டு வருவாராம். இவ்வாறு நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்ததால் ஆத்திரமடைந்த விஜயலெட்சுமி குடிகார கணவரை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளார். தீ மளமளவென பிடித்து உடல் எரிந்ததை கண்ட கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அணைத்துள்ளனர். உடல் முழுவதும் எரிந்து படுகாயமடைந்த விஜயலெட்சுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். மனைவியை காப்பாற்ற சென்ற ராஜேந்திரனும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story