மதுரை கள்ளிக்குடி அருகே தீயில் கருகி பெண் சாவு


மதுரை கள்ளிக்குடி அருகே தீயில் கருகி பெண் சாவு
x

மதுரை கள்ளிக்குடி அருகே தீயில் கருகி பெண் உயிரிழந்தார்.

மதுரை

பேரையூர்,

கள்ளிக்குடி தாலுகா போத்தநதியை சேர்ந்தவர் பாண்டித்தாய்(வயது 65). இவர் குடியிருக்கும் வீட்டில் மின்சாரம் இல்லாததால் அவர் மண்எண்ணெய் விளக்கு வைத்து சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது விளக்கு தவறி கீழே விழுந்து தீப்பிடித்ததில் பாண்டிதாய் சேலையில் தீப்பிடித்து உடலில் தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story