பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவருடைய மனைவி பரிமளா (வயது 35). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் பரிமளா மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பரிமளா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குபேந்திரன், பரிமளாவை காப்பாற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிமளா உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story