விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி ஊராட்சி பொரைக்கிலான் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி சம்பூரணம் (வயது 58). இவர் கடந்த ஓராண்டாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பூரணம் தனது தோட்டத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த கலைக் கொள்ளி மருந்தை (விஷம்) குடித்தார்.
இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பூரணம் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story