விஷம் குடித்து பெண் தற்கொலை
சின்னசேலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே எலவடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சதீஷ்மணி (வயது 30) விவசாயி, இவருக்கும், சேலம் மாவட்டம், வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகள் சங்கீதா (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் நடந்த வாகன விபத்தில் சதீஷ்மணி இறந்தார். இதனால் சங்கீதா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மனமுடைந்த சங்கீதா விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.