விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

ஆலங்குளம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் இந்திராநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 57). வீட்டில் ஏற்கனவே கால்நடைகள் உள்ள நிலையில் சுப்பிரமணியன் மேலும் வளர்ப்பதற்கு ஆடுகள் வாங்கி வந்துள்ளார். இதற்கு வள்ளியம்மாள், ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ள நிலையில் ஆடுகள் வாங்கியது ஏன்? என கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த வள்ளியம்மாள் விஷம் குடித்தார். இதனை அறிந்த சுப்பிரமணியன் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வள்ளியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story