பெண் விஷம் குடித்து தற்கொலை


பெண் விஷம் குடித்து தற்கொலை
x

காயல்பட்டினத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் சேதுராஜா தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள தன்னுடைய மகள் சந்தனகுமாரி வீட்டில் வசித்து வந்தார். மேலும் முத்துலட்சுமி இட்லி வியாபாரமும் செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தபோதும், இட்லி வியாபாரம் செய்து வந்தார். எனவே முத்துலட்சுமியிடம் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்குமாறு மகள் அறிவுறுத்தினார். எனினும் முத்துலட்சுமி இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமி திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story