விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x

களக்காடு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளம் நாடார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுககனி (வயது 56). இவரது மனைவி அன்னபுஷ்பம் (55). இவர்களின் பேரனுக்கு சாமிதோப்பு கோவிலில் முடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு உறவினர்களை ஆறுமுககனியின் மகன் சேர்மன்துரை அழைத்திருந்தார். இது அன்னபுஷ்பத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் முடி எடுக்கும் நிகழ்ச்சிக்கு செல்லாமல், ஊச்சிக்குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அங்கு வைத்து அன்னபுஷ்பம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்னபுஷ்பம் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story