விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2022 12:43 AM IST (Updated: 19 Dec 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மனைவி காமாட்சி (வயது 65). இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் நெடுமாறன் புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story