விஷம் குடித்து பெண் தற்கொலை
களக்காடு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி முத்து செல்வி (வயது 34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்து செல்விக்கு இளைப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோயின் தாக்கம் குறையாததால் மனம் உடைந்து காணப்பட்ட அவர், கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.