நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை


நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2023 2:30 AM IST (Updated: 27 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மனைவி சமீரா பானு (வயது 25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இப்ராகிம் வடமாநிலத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சமீராபானு வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்தார்.

இதில், மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சமீராபானு இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து, சமீராபானுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story