பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாட்ஸ்-அப்பில் தம்பிக்கு தகவல் அனுப்பி விட்டு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் அத்திப்பாளையம் ஊராட்சி அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. வியாபாரி. இவருடைய மனைவி கீதா (வயது37).

இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

குன்னூரில் கீதாவின் தாய் வீடு உள்ளது. அங்குள்ள கோவில் திருவிழாவுக்கு கீதா குடும்பத்துடன் சென்றார். அங்கு வேலுச் சாமி மது குடித்துவிட்டு ஊருக்கு செல்லலாம் என்று கீதாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு கீதா திருவிழா முடிந்த பிறகு செல்லலாம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனாலும் வேலுச்சாமி தொடர்ந்து வற்புறுத்தியதால் அவர்கள் குடும்பத்துடன் புறப்பட்டு வந்தனர்.

வீட்டிற்கு வந்த பிறகும் வேலுச்சாமி மது குடித்து விட்டு வந்து கீதாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கீதா தற்கொலை செய்வதற்கு முன்பு தனது தம்பி தினேஷ் என்பவருக்கு தனது மகன்களை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என்று வாட்ஸ்-அப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story