கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2023 12:10 AM IST (Updated: 8 Oct 2023 12:10 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனத்தை அடுத்த வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழிலன் என்ற செந்தூரப்பாண்டி மனைவி எழிலரசி(வயது 25). செந்தூரப்பாண்டி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் மன வேதனையில் இருந்த எழிலரசி துக்கம் தாங்காமல் நேற்று காலை வீட்டில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்து பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வைரபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story