குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நெகமம்
குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குடும்ப தகராறு
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கணக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 40). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருைடய மனைவி சத்தீஸ்வரி (35). நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் சுகாதார தன் ஆர்வலாராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் கணவருடன் கோபித்து கொண்டு சத்தீஸ்வரி தனது மகன்களை ரமேஷ்குமாரிடம் விட்டு விட்டு, பொன்னாயூரில் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து நெகமத்திற்கு பணிக்கு வந்து கொண்டு இருந்தார்.
கிணற்றில் குதித்தார்
நேற்று முன்தினம் சத்தீஸ்வரியின் தாய், தந்தை வெளியூர் சென்று இருந்தனர். அப்போது சத்தீஸ்வரி தனது தந்தைக்கு போன் செய்து தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கொண்டு தனது நெகமம் அருகே உள்ள கணக்கம்பட்டிக்கு வந்து கொண்டு இருந்தார். கணக்கம்பட்டி செல்லும் வழியில் உள்ள கிணற்றில் திடீரென குதித்தார். நீச்சல் தெரியாததால் அலறல் சத்தம் போட்டு உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனே நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சாவு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சத்தீஸ்வரியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சத்தீஸ்வரி இறந்து விட்டதாக என தெரிவித்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் குடும்ப தகராறு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.