மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி:பெண் தீக்குளித்து தற்கொலை


மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி:பெண் தீக்குளித்து தற்கொலை
x

நெகமம் அருகே மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாத விரக்தியில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்

நெகமம்: நெகமம் அருகே மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாத விரக்தியில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மகளின் மேல்படிப்புக்கு...

நெகமம் அடுத்த மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாரதா(வயது 43). இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது அவர், 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்க விரும்பியுள்ளார்.

ஆனால் மேல்படிப்பாக கல்லூரியில் படிக்க வைக்க குடும்பத்தில் போதிய வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் சாரதா மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

தீக்குளித்து தற்கொலை

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாரதா உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலியில் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சாரதாவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சாரதா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சாரதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story