அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் தற்கொலை


அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி வசந்தம் நகரை சேர்ந்தவர் அங்கப்பன். இவருடைய மனைவி மனோரஞ்சிதம் (வயது 69). இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கப்பன் உடல்நல குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து கணவரை இழந்த மனோரஞ்சிதம் சோகத்துடன் இருந்து வந்துள்ளார்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த மனோரஞ்சிதம் வாழ்க்கையில் விரக்தியடைந்து, வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி கிடந்்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மனோரஞ்சிதத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மனோரஞ்சிதம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story