விழுப்புரத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
விழுப்புரத்தில் கடன்சுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் பாகர்ஷா வீதி பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் மனைவி தையல்நாயகி (வயது 48). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர் அதிக கடன் சுமையால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் சுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.