மதுரவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மதுரவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மதுரவாயலில் இளம்பெண் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிஷா (வயது 21). இவர் சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதற்காக மதுரவாயல், லட்சுமி நகர் பகுதியில் தன்னுடன் பணிபுரியும் லோகேஸ்வரி என்பவருடன் சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு நிஷா தனது செல்போனில் நீண்டநேரம் யாருடனோ பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகேஸ்வரி தனது அறைக்கு சென்று தூங்கிவிட்டார்.

நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது சமையல் அறையில் நிஷா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story