தீக்குளித்து பெண் தற்கொலை
சங்கராபுரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை போலீசார் தீவிர விசாரணை
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் நாகேஸ்வரன்(வயது26). இவர் திருப்பூரில் கோழிப்பண்ணையில் வேலை செய்தபோது கலாமணி (வயது 34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கலாமணி அவரது கணவருடன் பொய்க்குணத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதில் மனம் உடைந்த கலாமணி வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கலாமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொய்குணம் கிராம நிர்வாக அலுவலர் பெரியார் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து கலாமணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.