அழுகிய நிலையில் பெண் பிணம்


அழுகிய நிலையில் பெண் பிணம்
x

தஞ்சையில் அழுகிய நிலையில் பெண் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்


தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கரூப்ஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு காலியிடத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக நேற்றுஇரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பிணமாக கிடந்த பெண்ணின் அருகே மயக்க மாத்திரை அட்டை கிடந்தது. 10 மாத்திரைகள் கொண்ட அந்த அட்டையில் 7 மாத்திரைகள் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த மாத்திரையை தின்று பெண் தற்கொலை செய்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும், அந்த பகுதியில் கிடந்த மணிபர்சில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் இவர் எதற்காக இங்கே வந்தார்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story