கார் மோதி பெண் சாவு
மானாமதுரை அருகே சாலை தடுப்பில் கார் மோதி பெண் பலியானார்.
சிவகங்கை
மானாமதுரை,
சென்னை, வியாசர்பாடி, இந்திரா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் மனைவி விண்ணிலெட்சுமி (வயது 33). இவர் தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்டம் சூசையப்பர்பட்டினத்திற்கு காரில் வந்தார். இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பி அதே காரில் உறவினர்களுடன் சூசையப்பர்பட்டினத்தில் இருந்து மானாமதுரையை நோக்கி சென்றார். அப்போது கரிசல்குளம் அருகே ரோட்டோரம் உள்ள தடுப்புகள் மீது கார் மோதியது, இந்த விபத்தில் விண்ணிலெட்சுமி பலியானார். இதில் காரில் வந்த ஜெயப்பிரியா மற்றும் ரகுபதி ஆகியோர் காயமடைந்தனர்
Related Tags :
Next Story