மினி லாரி மோதி பெண் பலி


மினி லாரி மோதி பெண் பலி
x

பெண் மீது தனியார் பார்சல் சர்வீஸ் மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தாா்

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் கீழத் தெருவை சேர்ந்த ராஜகுமாரன் என்பவரது மனைவி மகாலட்சுமி வயது 44. இவர் கும்பகோணத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் தேப்பெருமாநல்லூர் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். புளியம்பட்டை மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது கும்பகோணத்தில் இருந்து திருவிடைமருதூர்நோக்கி சென்ற தனியார் பார்சல் சர்வீஸ் மினி லாரி மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து அவர் மினிலாரியில் மாட்டி இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் விரைந்து வந்து இறந்த மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மினிலாரி இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இது பற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story