மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு

சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி பெண் இறந்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சுரேந்திரன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி கனகம் (42). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பாத்திர கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக நடந்து வந்ததாக தெரிகிறது. அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
இதில் அவர் சாலை தடுப்பு சுவரில் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கனகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த மின் நகரை சேர்ந்த ஸ்ரீஹரி, விஜயராகவன் ஆகியோரும் காயமடைந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






