உளுந்து அடிக்கும் எந்திரத்தில் சிக்கி பெண் சாவு
பண்ருட்டி அருகே உளுந்து அடிக்கும் எந்திரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் நெல், உளுந்து அடிக்கும் எந்திரம் வைத்துள்ளார். தட்டாம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி புஷ்பா(வயது 41) என்பவர் உளுந்து அடிக்கும் எந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனே அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புஷ்பா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story