வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற பெண் சாவு
வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற பெண் உயிரிழந்தார்.
கரூர் கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் லதா(வயது 31). இவர் தீபக்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லதா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மீண்டும் லதாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
வலி தாங்க முடியாமல் கதறிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன், லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.