விஷம் குடித்து பெண் சாவு


விஷம் குடித்து பெண் சாவு
x

மூலைக்கரைப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் இறந்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 50) விவசாயி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (48). இவர்களது தோட்டத்தில் விவசாய வேலைகள் நடைபெற்று வந்தது. விவசாய வேலைகளில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு அவர்களிடம் பணத்தட்டுப்பாடு இருந்ததாகவும், இதனால் வேலை செய்தவர்கள் கூலி கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவனும், மனைவியும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த பேச்சியம்மாள் விவசாயத்துக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

1 More update

Related Tags :
Next Story