மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே மூக்கனூர் புதூர் சில்லி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 48), புதிய வீடுகளுக்கு டைல்ஸ் கற்கள் போடும் பணி செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது மனைவி சுகுணாவுடன் (45) மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பொன்னேரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது திடீரென மழை பெய்தது. இதனால் சுகுணா தான் வைத்திருந்த குடையை பிடித்தார். அப்போது காற்றில் பறந்த குடையை பிடிக்கும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.