மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. அவரது மனைவி வசந்தா (வயது 55). இவர், சம்பவத்தன்று தக்கோலம் அருகே உள்ள மாரிமங்கலம் கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர், வசந்தா வீட்டிற்கு வருவதற்காக உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

கடம்பநல்லூர்-பரமேஸ்வரமங்களம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து வசந்தா கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story