மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு


மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 11 Jun 2023 5:32 PM IST (Updated: 12 Jun 2023 3:15 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

குடியாத்தம் அருகே உள்ள காளியம்மன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53), இவரது மனைவி நீலாவதி (49).

இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆரணியில் ஹவுசிங் போர்டில் உள்ள நீலாவதியின் சகோதரர் சரவணன் (42) வீட்டில் 2 நாட்கள் தங்க இன்று காலை ஆரணிக்கு மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

சிவக்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் ஆரணி செல்லும் ரோட்டில் கண்ணமங்கலத்தை அடுத்த கொங்கராம்பட்டு ஆரம்பப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறியது.

இதில் நீலாவதி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் சரவணன் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story