பள்ளிபாளையம்காவிரி ஆற்றில் குதித்த பெண் பலி


பள்ளிபாளையம்காவிரி ஆற்றில் குதித்த பெண் பலி
x
நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கடந்த 30-ந் தேதி ஆற்று பாலத்தின் மீது இருந்து சுமார் 55 வயதுடைய பெண் ஒருவர் ஆற்றில் குதித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிபாளையம், ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்ணின் உடலை தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் அந்த பெண்ணின் உடல் ஓடப்பள்ளி நீர்மின்நிலைய கதவணையையொட்டி கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் திருச்செங்கோட்டை சேர்ந்த அன்பரசி என்பதும், அவரது கணவர் சண்முகம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் என்பதும், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனவே குழந்தைகளும், கணவரும் இல்லை என ஏக்கத்தில் அந்த பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


Next Story