மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் பலி


மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் பலி
x

வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் பின்பக்க சக்கரத்தில் சேலை சிக்கியதால் கீழே விழுந்து பெண் பலியானார்.

வேலூர்

வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் பின்பக்க சக்கரத்தில் சேலை சிக்கியதால் கீழே விழுந்து பெண் பலியானார்.

சக்கரத்தில் சேலை சிக்கியது

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள போகலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி விஜயா (வயது 55). இவரது மகன் முரளி (28). வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முரளியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க முரளி, விஜயா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் போகலூரில் இருந்து வேலூருக்கு வந்தனர்.

முரளி மோட்டார் சைக்கிள் ஓட்டினார். பின்னால் விஜயா அமர்ந்திருந்தார். வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்தபோது விஜயாவின் சேலை எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்திற்குள் சிக்கியது.

பெண் பலி

இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இதில், விஜயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முரளியும் படுகாயம் அடைந்தார். தனது கண் முன்னே தாய் இறந்ததை கண்டு முரளி கதறி அழுது துடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முரளியை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போகலூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story