லாரி மீது கார் மோதி விபத்து: படுகாயமடைந்த பெண் சாவு


லாரி மீது கார் மோதி விபத்து:    படுகாயமடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

லாரி மீது கார் மோதி விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரன் (வயது 64). இவரது மனைவி லட்சுமி (62). இருவரும் காரைக்குடிக்கு காரில் சென்று விட்டு நேற்று முன்தினம் காலையில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திண்டிவனம் அடுத்த சாரம் மெயின் ரோட்டில் லே பகுதியில் லாரி ஒன்று குறுக்கே வந்ததால், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியது. இதில் காரில் வந்த லட்சுமி, சங்கன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லட்சுமி பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story