சேலையில் தீ பிடித்து பெண் சாவு
சேலையில் தீ பிடித்து பெண் சாவு
கோயம்புத்தூர்
கணபதி
கோவை சின்னவேடம்பட்டியில் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி விருமாயி (வயது36).
இவர் தனது வீட்டின் அருகே இருந்த குப்பைகளை கூட்டி தீ வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது. உடனே கணவர் விஜயகுமாரும், மகனும் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த மார்ச் 31-ந் தேதி ஓரளவு குணமடைந்து வீடு திரும்பினார்.
சர்க்கரை நோயாளியாக இருந்த அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 -ந் தேதி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story