மயக்க ஊசி செலுத்திய பெண் சாவு


மயக்க ஊசி செலுத்திய பெண் சாவு
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மயக்க ஊசி செலுத்திய பெண் இறந்தாா். தனியார் மருத்துவமனை மீது போலீசில் மகன் புகார் தொிவித்தாா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள பாண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 41). இவர், தனது தாய் பெரியம்மாளை(58) தண்டுவட ஜவ்வு தேய்மான பிரச்சினை சம்பந்தமாக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 23-ந் தேதி இரவு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமானது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். அதன்பேரில் பெரியம்மாளை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெரியம்மாள் இறந்து விட்டார்.

இது குறித்து ராம்குமார், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் தாய் இறந்து விட்டார். எனவே தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story