மின்சாரம் தாக்கி பெண் சாவு
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி (வயது 39). நேற்று காலை இவரது மகன் அருண்குமார் (19) பால் வாங்க வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது தாயார் காளீஸ்வரி வீட்டு கிரைண்டரில் விழுந்து கிடந்தார். கிரைண்டர் சுவிட்ச் போடப்பட்டிருந்தது. உடனடியாக அருண்குமார் சுவிட்ச்சை அணைத்து விட்டு தனது தாயாரை மீட்டு காரில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு காளீஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிரைண்டரில் இருந்து மின்சாரம் தாக்கி காளீஸ்வரி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story