மின்சாரம் தாக்கி பெண் சாவு
திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
திட்டக்குடி
திட்டக்குடி தாலுகா பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மனைவி தனபாக்கியம்(வயது 65). இவர் நேற்று அப்பகுதியில் தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு திட்ட வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்ததும் மதியம் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் தனபாக்கியம் அவரக்கு சொந்தமான நிலத்தை பார்த்து வர சென்றார்.
அப்போது நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் இவரது மோட்டார் கொட்டாயின் அருகில் நின்ற மின்கம்பத்தில் உள்ள மின் கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்தது. இதை கவனிக்காமல் சென்றபோது மின் கம்பியில் தனபாக்கியத்தின் கை மற்றும் கால் உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆவினங்குடி போலீசார் தனபாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.