அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்ற பெண் சாவு
திசையன்விளையில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி யாதவர் தெருவை சேர்ந்தவர் கந்தன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 35). இவருக்கு 2 மாதங்களுக்கு முன்பு மனநல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்காக நெல்லையில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தம்பி அந்தோணிகுமார் உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story