பாம்பு கடித்து பெண் பலி


பாம்பு கடித்து பெண் பலி
x

மோகனூரில் பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள லத்துவாடியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துசாமி மனைவி கலாராணி (வயது 47). இவர் லத்துவாடி கால்நடைமருத்துவக் கல்லூரியில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கலாராணி நேற்று கால்நடை கல்லூரி வளாகத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ விஷப்பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அங்கிருந்தவர்கள் கலாராணியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கலாராணி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் முத்துசாமி மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


Next Story