சரக்கு வேனில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு


சரக்கு வேனில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
x

பூதலூர் அருகே சரக்கு வேனில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருச்சி அருகே உள்ள தெற்கு காட்டூர் பிலோமினாநகரை ேசர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ரூபா. மணிகண்டன், ரூபா மற்றும் உறவினர்கள் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நரங்கிபட்டி கிராம கோவிலுக்கு மினி சரக்கு வேனில் சென்றனர். அங்கு சாமி தரிசனத்துக்கு பின் இவர்கள் வாகனத்தில் இருந்த பாத்திரங்களை தொண்டாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் இறக்கி வைக்க அதே சரக்குவேனில் சென்றனர். மினி வேன் ராயமுண்டான்பட்டி கிராமத்தின் அருகில் அதிவேகமாக வளைவில் திரும்பும்போது பின்னால் உட்கார்ந்து வந்த மணிகண்டனின் மனைவி ரூபா (வயது 26) வேனில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அதே வண்டியில் ஏற்றி சென்று துவாக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story