தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் சாவு


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் சாவு

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமத்தை அடுத்த வலசுபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவரது மனைவி கனகேஸ்வரி(வயது 43). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கனகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டின் முன்பு உள்ள 10 அடி ஆழ தண்ணீர் தொட்டி அருகில் அமர்ந்து துணி துவைத்து கொண்டு இருந்தார். பின்னர் தொட்டியில் இருந்து பக்கெட் மூலம் தண்ணீர் எடுக்க முயற்சித்தார். அப்போது அவர் திடீரென தவறி தொட்டிக்குள் விழுந்தார். ஆனால் மீண்டும் அவரால் தொட்டியில் இருந்து மேலே எழும்பி வர முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story