தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம்


தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம்
x

தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கீழத்தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது34). விவசாய தொழிலாளி. இவர் தனது மனைவி வேம்பு (30) மற்றும் குழந்தைகளுடன் தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் வேம்புவின் தலை மற்றும் காலில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story