கார் மோதி பெண் படுகாயம்
கார் மோதி பெண் படுகாயம்
கிணத்துக்கடவு
கோவை மதுக்கரைஅருகே உள்ள மாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 41). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி(36). இந்த நிலையில் சக்திவேல் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணவேணியுடன் கிணத்துக்கடவுக்கு வந்தார். பின்னர் மீண்டும் கோவைக்கு திரும்பி சென்றார். வடபுதூர் மாகாளியம்மன் கோவில் அருகில் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் சக்திவேல், கிருஷ்ணவேணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில் கிருஷ்ணவேணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சக்திவேல் அதிர்ஷ்டமாக காயமின்றி தப்பினார். உடனே அவர் படுகாயமடைந்த கிருஷ்ணவேணியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.